மஹாளய பட்சம் காருண்ய பித்ரு தர்ப்பணம் 2026 | Mahalaya Paksha Mantra – SREYAS ASTRO
By sreyasastro / July 10, 2026 / No Comments
- Home
- மஹாளய பட்சம் காருண்ய பித்ரு தர்ப்பணம் 2026 | Mahalaya Paksha Mantra – SREYAS ASTRO

மஹாளய பட்சம் - காருண்ய வைஷ்ணவ சங்கல்பம்
புரட்டாசி 10 (27.09.2026) முதல் புரட்டாசி 22 (09.10.2026) வரை
Focus: Mahalaya Tarpanam 2026 | SREYAS ASTRO Tirupati - Complete Guide in Tamil
📌 மஹாளய பக்ஷ முக்கிய குறிப்புகள்:
- அவரவர் தர்ப்பணங்கள் செய்கின்ற நாளில் திதி, கிழமை, நட்சத்திரம் அன்றைய பஞ்சாங்கம் பார்த்து சங்கல்பம் செய்து கொள்ளவும். (கீழே அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது).
- அமாவாசை தர்ப்பணத்தில் செய்வது போல் பித்ரு வர்க்கம் மற்றும் மாத்ரு வர்க்கம் ஆவாஹனம் செய்த பிறகு, இரண்டு வர்க்கத்தின் நடுவில் 2 புக்னம் சேர்த்து காருண்ய பித்ரு ஆவாஹனம் செய்ய வேண்டும்.
- பித்ரு - மாத்ரு தர்ப்பணம் செய்த பிறகே காருண்ய பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
- மஹா பரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம் மற்றும் கஜச்சாயை ஆகிய புண்ணிய திதிகளில் தர்ப்பணம் செய்வது மகா விசேஷம். அவரவர் பெற்றோர் திதியிலும் செய்யலாம்.
- தர்மபத்னி ரஜஸ்வலையாக (மாதவிடாய்) இருந்தால் மஹாளயம் செய்யக் கூடாது. கார்த்திகை மாதம் அமாவாசை வரை அவகாசம் உண்டு.
- மஹாளய காலத்தில் சிராத்தம் வந்தால், சிராத்தம் முடிந்த பிறகுதான் மஹாளயம் செய்ய வேண்டும். தாயார் ஜீவித்திருந்தால் 'பிதாமஹி, ப்ரபிதாமஹி, பிது: ப்ரபிதாமஹி' என்று ஆவாஹனம் செய்யவும்.

காருண்ய பித்ரு தர்ப்பணம் (ப்ராசீநாவீதம் - பூணூல் வலது தோளில்)
"ஆயாத காருண்ய பிதர: - ஸோம்யா கம்பீரை: - பதிபி: - பூர்வ்யை: - ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச - தீர்கமாயு: சதம் சாரதீஞ்ச - ஸர்வாந் காருண்ய பித்ரூந் ஆவாஹயாமி."
(என்று ஜபித்து எள்ளை நடுவில் உள்ள புக்னத்தில் சேர்க்கவும்)
"ஸக்ருதாச்சிந்நம் பர்ஹி: - ஊர்ணாம்ருது ஸ்யோநம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மிந் ஸீதந்து மே பிதர: - ஸோம்யா: - பிதாமஹா: - ப்ரபிதாமஹாஸ்ச அநுகைஸ்ஸஹ இதம் ஆஸநம்."
• பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய ஸர்வான் காருண்ய பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
• பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய ஸர்வான் காருண்ய பித்ரு பத்நீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
• ஜ்ஞாதாஜ்ஞாத வர்கத்வய காருண்ய பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
• ஜ்ஞாதாஜ்ஞாத வர்கத்வய காருண்ய பித்ரு பத்நீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
(என்று சொல்லி எள்ளும் ஜலமும் அப்ரதக்ஷிணமாக 3 முறை காருண்ய வர்க்க புக்னத்தின் மேல் சுற்றி விடவும்)
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
(என்று சொல்லி இரண்டு உள்ளங்கைகளையும் புக்னத்திற்குக் காண்பிக்கவும்)
"நமோ வ: பிதரோ ரஸாய நமோ வ: பிதரோ ஸுஷ்மாய நமோ வ: பிதரோ ஜீவாய நமோ வ: பிதர: ஸ்வதாயை நமோ வ: பிதரோ மந்யவே நமோ வ: பிதரோ கோராய பிதரோ நமோ வ: - ய ஏதஸ்மிந் லோகேஸ்த யுஷ்மாகும்ஸ்தேநு யேஸ்மிந் லோகே மாம் தேநு - ய ஏதஸ்மிந் லோகேஸ்த யூயம் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்த - யே அஸ்மிந் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்."
உபவீதம் (பூணூல் இடது தோள்) செய்து ஸேவிக்கவும்; அபிவாதநம் செய்யவும்.
மீண்டும் ப்ராசீநாவீதம் (பூணூல் வலது தோள்) செய்து கொண்டு 3 முறை ப்ரதக்ஷிணம் செய்யவும்:
உபவீதி செய்து ஸேவிக்கவும். பிறகு மீண்டும் ப்ராசீநாவீதம் செய்து கொள்ளவும்.
1. பித்ரு வர்க்கம்: ...கோத்ராந் (1)(2)(3) ஸர்மண: வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாந் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (கிழக்கில் உள்ள புக்னத்தில் எள் சேர்க்கவும்)
2. மாதாமஹர் வர்க்கம்: கோத்ராந் (1)(2)(3) ஸர்மண: வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந் அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாந் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (மேற்கில் உள்ள புக்னத்தில் எள் சேர்க்கவும்)
3. காருண்ய வர்க்கம்: பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய ஸர்வான் காருண்ய பித்ரூந் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (நடுவில் உள்ள புக்னத்தில் எள் சேர்க்கவும்)
வழக்கம் போல அமாவாசை தர்ப்பணம் செய்து கொண்டு, கடைசியாக எல்லா புக்னங்களையும் அவிழ்த்து தர்ப்பத்தின் நுனி ஒரே பக்கமாக வைத்து சிறிது எள் சேர்த்துக் கொள்ளவும்:
தே த்ருப்திம் அகிலாயாந்து மயா த்யக்தை: குஸோதகை: ||"
(எள்ளு தீர்த்தத்துடன் தெற்கு முகமாக விடவும்)
உபவீதம் செய்து ஆசமநம் செய்யவும்.
"பகவாநேவ - ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஸத்தைகரஸேந - அநேந ஆத்மநா கர்த்ரா - ஸ்வகியைஸ்ச பரமபுருஷ: - ஸர்வேஷீ - ஸ்ரிய:பதி: - ஸ்வசேஷபூதமிதம் வர்கத்வய பித்ரூந் ஸ்வாராதநைக - ப்ரயோஜநாய உத்திச்ய ஸக்ருந் மஹாளய ஸ்ராத்த ப்ரதிநிதி திலதர்ப்பணாக்யம் கர்ம (பகவான்) ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்."
2 முறை ஆசமநம் - பவித்ர விஸர்ஜனம்
பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ: | ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து | சுபம்.
சந்தேகம் இருந்தால் Sreyas Astro வாட்ஸ்அப் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.
📊 சங்கல்பத்திற்கான பஞ்சாங்க விவரங்கள் (GRID அட்டவணைகள்)
• தை முதல் ஆனி வரை: உத்தராயணம்
• பௌர்ணமி முதல் அமாவாசை வரை: க்ருஷ்ணபக்ஷம் (தேய்பிறை)
வஸந்த ருது
க்ரீஷ்ம ருது
வர்ஷ ருது
சரத் ருது
ஹேமந்த ருது
சிசிர ருது
மேஷ
வருஷப
மிதுன
கர்கட
ஸிம்ஹ
கன்யா
துலா
வருச்சிக
தனுர் (சாப)
மகர
கும்ப
மீன
பாநுவாஸரம்
இந்துவாஸரம்
பௌமவாஸரம்
ஸௌம்யவாஸரம்
குருவாஸரம்
ப்ருகுவாஸரம்
ஸ்திரவாஸரம்
அச்விநீ
அபபரணீ
க்ருத்திகா
ரோஹிணீ
ம்ருகசீர்ஷா
ஆர்த்ரா
புனர்வஸு
புஷ்யம்
ஆச்லேஷா
மகா
பூர்வபல்குநீ
உத்தரபல்குநீ
ஹஸ்தா
சித்ரா
ஸ்வாதீ
விசாகா
அநுராதா
ஜ்யேஷ்டா
மூலா
பூர்வாஷாடா
உத்தராஷாடா
ச்ரவண
ச்ரவிஷ்டா
சதபிஷக்
பூர்வப்ரோஷ்டபதா
உத்தரப்ரோஷ்டபதா
ரேவதீ
