SREYAS ASTRO Logo Tirupati

மஹாளய பட்சம் - காருண்ய வைஷ்ணவ சங்கல்பம்

புரட்டாசி 10 (27.09.2026) முதல் புரட்டாசி 22 (09.10.2026) வரை

Focus: Mahalaya Tarpanam 2026 | SREYAS ASTRO Tirupati - Complete Guide in Tamil

📌 மஹாளய பக்ஷ முக்கிய குறிப்புகள்:

  • அவரவர் தர்ப்பணங்கள் செய்கின்ற நாளில் திதி, கிழமை, நட்சத்திரம் அன்றைய பஞ்சாங்கம் பார்த்து சங்கல்பம் செய்து கொள்ளவும். (கீழே அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது).
  • அமாவாசை தர்ப்பணத்தில் செய்வது போல் பித்ரு வர்க்கம் மற்றும் மாத்ரு வர்க்கம் ஆவாஹனம் செய்த பிறகு, இரண்டு வர்க்கத்தின் நடுவில் 2 புக்னம் சேர்த்து காருண்ய பித்ரு ஆவாஹனம் செய்ய வேண்டும்.
  • பித்ரு - மாத்ரு தர்ப்பணம் செய்த பிறகே காருண்ய பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
  • மஹா பரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம் மற்றும் கஜச்சாயை ஆகிய புண்ணிய திதிகளில் தர்ப்பணம் செய்வது மகா விசேஷம். அவரவர் பெற்றோர் திதியிலும் செய்யலாம்.
  • தர்மபத்னி ரஜஸ்வலையாக (மாதவிடாய்) இருந்தால் மஹாளயம் செய்யக் கூடாது. கார்த்திகை மாதம் அமாவாசை வரை அவகாசம் உண்டு.
  • மஹாளய காலத்தில் சிராத்தம் வந்தால், சிராத்தம் முடிந்த பிறகுதான் மஹாளயம் செய்ய வேண்டும். தாயார் ஜீவித்திருந்தால் 'பிதாமஹி, ப்ரபிதாமஹி, பிது: ப்ரபிதாமஹி' என்று ஆவாஹனம் செய்யவும்.
Karunya Tarpanam Diagram EAST WEST

காருண்ய பித்ரு தர்ப்பணம் (ப்ராசீநாவீதம் - பூணூல் வலது தோளில்)

ஆவாஹனம்:
"ஆயாத காருண்ய பிதர: - ஸோம்யா கம்பீரை: - பதிபி: - பூர்வ்யை: - ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிஞ்ச - தீர்கமாயு: சதம் சாரதீஞ்ச - ஸர்வாந் காருண்ய பித்ரூந் ஆவாஹயாமி."
(என்று ஜபித்து எள்ளை நடுவில் உள்ள புக்னத்தில் சேர்க்கவும்)
ஆஸநம்: (உபவீதம் செய்து காருண்ய வர்க்கத்திற்குப் பிறகு ப்ராசீநாவீதம் செய்துகொண்டு, இன்னொரு புக்னத்தை எடுத்து நடுவில் உள்ள புக்னத்திற்கு சமர்ப்பிக்கவும்)
"ஸக்ருதாச்சிந்நம் பர்ஹி: - ஊர்ணாம்ருது ஸ்யோநம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மிந் ஸீதந்து மே பிதர: - ஸோம்யா: - பிதாமஹா: - ப்ரபிதாமஹாஸ்ச அநுகைஸ்ஸஹ இதம் ஆஸநம்."
தர்ப்பணம்: (பித்ரு தீர்த்தத்தினால் வலது கை கட்டைவிரல் - ஆள்காட்டி விரல் இடையே எள்ளும் ஜலமும் நடு புக்னத்தில் விடவும்)
• பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய ஸர்வான் காருண்ய பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
• பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய ஸர்வான் காருண்ய பித்ரு பத்நீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
• ஜ்ஞாதாஜ்ஞாத வர்கத்வய காருண்ய பித்ரூந் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
• ஜ்ஞாதாஜ்ஞாத வர்கத்வய காருண்ய பித்ரு பத்நீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 முறை)
"ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: - கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே காருண்ய பித்ரூந்"
(என்று சொல்லி எள்ளும் ஜலமும் அப்ரதக்ஷிணமாக 3 முறை காருண்ய வர்க்க புக்னத்தின் மேல் சுற்றி விடவும்)
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
(என்று சொல்லி இரண்டு உள்ளங்கைகளையும் புக்னத்திற்குக் காண்பிக்கவும்)
உபஸ்தாநம்: (எழுந்து நின்று கைகூப்பிச் சொல்லவும்)
"நமோ வ: பிதரோ ரஸாய நமோ வ: பிதரோ ஸுஷ்மாய நமோ வ: பிதரோ ஜீவாய நமோ வ: பிதர: ஸ்வதாயை நமோ வ: பிதரோ மந்யவே நமோ வ: பிதரோ கோராய பிதரோ நமோ வ: - ய ஏதஸ்மிந் லோகேஸ்த யுஷ்மாகும்ஸ்தேநு யேஸ்மிந் லோகே மாம் தேநு - ய ஏதஸ்மிந் லோகேஸ்த யூயம் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்த - யே அஸ்மிந் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்."

உபவீதம் (பூணூல் இடது தோள்) செய்து ஸேவிக்கவும்; அபிவாதநம் செய்யவும்.
மீண்டும் ப்ராசீநாவீதம் (பூணூல் வலது தோள்) செய்து கொண்டு 3 முறை ப்ரதக்ஷிணம் செய்யவும்:

"வாஜே வாஜே அவத வாஜிந: - நோதனேஷு விப்ராம்ருதா ருதஜ்ஞா: அஸ்யமத்வ: - பிபத மாதயத்வம் - த்ருப்தாயாத பதிபி: - தேவயானை: தேவதாப்ய: - பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவ ச நம: ஸ்வதாயை - ஸ்வாஹாயை - நித்யமேவ நமோ நம:"

உபவீதி செய்து ஸேவிக்கவும். பிறகு மீண்டும் ப்ராசீநாவீதம் செய்து கொள்ளவும்.

உத்வாஸநம்:
1. பித்ரு வர்க்கம்: ...கோத்ராந் (1)(2)(3) ஸர்மண: வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாந் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (கிழக்கில் உள்ள புக்னத்தில் எள் சேர்க்கவும்)
2. மாதாமஹர் வர்க்கம்: கோத்ராந் (1)(2)(3) ஸர்மண: வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந் அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாந் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (மேற்கில் உள்ள புக்னத்தில் எள் சேர்க்கவும்)
3. காருண்ய வர்க்கம்: பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய ஸர்வான் காருண்ய பித்ரூந் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. (நடுவில் உள்ள புக்னத்தில் எள் சேர்க்கவும்)

வழக்கம் போல அமாவாசை தர்ப்பணம் செய்து கொண்டு, கடைசியாக எல்லா புக்னங்களையும் அவிழ்த்து தர்ப்பத்தின் நுனி ஒரே பக்கமாக வைத்து சிறிது எள் சேர்த்துக் கொள்ளவும்:

"யேஷாம் ந பிதா நப்ராதா நபந்து: நாந்ய கோத்ரிண: |
தே த்ருப்திம் அகிலாயாந்து மயா த்யக்தை: குஸோதகை: ||"

(எள்ளு தீர்த்தத்துடன் தெற்கு முகமாக விடவும்)

உபவீதம் செய்து ஆசமநம் செய்யவும்.

ஸாத்விக த்யாகம் (வடகலையார் மட்டும்):
"பகவாநேவ - ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஸத்தைகரஸேந - அநேந ஆத்மநா கர்த்ரா - ஸ்வகியைஸ்ச பரமபுருஷ: - ஸர்வேஷீ - ஸ்ரிய:பதி: - ஸ்வசேஷபூதமிதம் வர்கத்வய பித்ரூந் ஸ்வாராதநைக - ப்ரயோஜநாய உத்திச்ய ஸக்ருந் மஹாளய ஸ்ராத்த ப்ரதிநிதி திலதர்ப்பணாக்யம் கர்ம (பகவான்) ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந்."

2 முறை ஆசமநம் - பவித்ர விஸர்ஜனம்
பகவாந் ப்ரீயதாம் வாஸுதேவ: | ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து | சுபம்.
சந்தேகம் இருந்தால் Sreyas Astro வாட்ஸ்அப் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.

📊 சங்கல்பத்திற்கான பஞ்சாங்க விவரங்கள் (GRID அட்டவணைகள்)

அயனங்கள் (2)
• ஆடி முதல் மார்கழி வரை: தக்ஷிணாயனம்
• தை முதல் ஆனி வரை: உத்தராயணம்
பக்ஷங்கள் (2)
• அமாவாசை முதல் பௌர்ணமி வரை: சுக்லபக்ஷம் (வளர்பிறை)
• பௌர்ணமி முதல் அமாவாசை வரை: க்ருஷ்ணபக்ஷம் (தேய்பிறை)
ருதுக்கள் (6)
சித்திரை - வைகாசி
வஸந்த ருது
ஆனி - ஆடி
க்ரீஷ்ம ருது
ஆவணி - புரட்டாசி
வர்ஷ ருது
ஐப்பசி - கார்த்திகை
சரத் ருது
மார்கழி - தை
ஹேமந்த ருது
மாசி - பங்குனி
சிசிர ருது
மாதங்கள் (12)
சித்திரை
மேஷ
வைகாசி
வருஷப
ஆனி
மிதுன
ஆடி
கர்கட
ஆவணி
ஸிம்ஹ
புரட்டாசி
கன்யா
ஐப்பசி
துலா
கார்த்திகை
வருச்சிக
மார்கழி
தனுர் (சாப)
தை
மகர
மாசி
கும்ப
பங்குனி
மீன
கிழமைகள் (வாரங்கள்)
ஞாயிறு
பாநுவாஸரம்
திங்கள்
இந்துவாஸரம்
செவ்வாய்
பௌமவாஸரம்
புதன்
ஸௌம்யவாஸரம்
வியாழன்
குருவாஸரம்
வெள்ளி
ப்ருகுவாஸரம்
சனி
ஸ்திரவாஸரம்
27 நட்சத்திரங்கள் (சங்கல்ப உச்சரிப்பு)
அசுவினி
அச்விநீ
பரணி
அபபரணீ
கிருத்திகை
க்ருத்திகா
ரோகிணி
ரோஹிணீ
மிருகசீரிஷம்
ம்ருகசீர்ஷா
திருவாதிரை
ஆர்த்ரா
புனர்பூசம்
புனர்வஸு
பூசம்
புஷ்யம்
ஆயில்யம்
ஆச்லேஷா
மகம்
மகா
பூரம்
பூர்வபல்குநீ
உத்தரம்
உத்தரபல்குநீ
ஹஸ்தம்
ஹஸ்தா
சித்திரை
சித்ரா
சுவாதி
ஸ்வாதீ
விசாகம்
விசாகா
அனுஷம்
அநுராதா
கேட்டை
ஜ்யேஷ்டா
மூலம்
மூலா
பூராடம்
பூர்வாஷாடா
உத்திராடம்
உத்தராஷாடா
திருவோணம்
ச்ரவண
அவிட்டம்
ச்ரவிஷ்டா
சதயம்
சதபிஷக்
பூரட்டாதி
பூர்வப்ரோஷ்டபதா
உத்திரட்டாதி
உத்தரப்ரோஷ்டபதா
ரேவதி
ரேவதீ