SREYAS ASTRO Logo
SREYAS ASTRO | ஸ்ரீ வைஷ்ணவ உபாகர்ம வழிகாட்டி

ஆவணி அவிட்டம் வைஷ்ணவ சங்கல்பம் & பூர்ண மந்திரம் 2026

யஜுர் உபாகர்மம்: காமோகார்ஷீத் ஜபம், யக்ஞோபவீத தாரணம், நவகாண்டரிஷி தர்ப்பணம் & பித்ரு தர்ப்பண முழு முறை

📅 27.08.2026 — வியாழக்கிழமை (Thursday)

ஆவணி 10 (பராபவ நாம ஸம்வத்ஸரம்)

📌 திதி குறிப்பு: சதுர்தஸ்யாம் (Upto 09:54 AM) // பௌர்ணமாஸ்யாம் (From 09:55 AM)

1. காமோகார்ஷீத் ஜபம் (மஹா சங்கல்பம்)

கால்கள், கைகளை அலம்பி ஆசமனம் (அச்யுதாய நம:) செய்யவும். தர்ப்பத்தைப் பவித்ர விரலில் போட்டுக் கொண்டு, 2 தர்ப்பங்களை ஆசனமாகப் போடவும். 2 தர்ப்பங்களைப் பவித்ரத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.

(கை கூப்பி) சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே, யஸ்யாத்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா பரச்சதம் விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே.

(கைகளை வலது தொடை மேல் வைத்துக் கொண்டு) ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த... அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே ஸ்ரீ ச்வேத வரஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே...

பராபவ நாம ஸம்வத்ஸரே - தக்ஷிணாயனே - வர்ஷ ருதௌ - ஸிம்ம மாஸே - சுக்ல பக்ஷே - பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ - வாஸர: குரு வாஸர யுக்தாயாம் - ச்ரவிஷ்டா நக்ஷத்ரயுக்தாயாம்

ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ஸ்ரீபகவதாக்ஞா பகவத்கைங்கர்யரூபம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத்ஸர்ஜன அகரண ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்தர சத ஸங்க்யா (108 தரம்) அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யா (1008 தரம்) காமோகார்ஷீத் மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே.
(இடுக்கு தர்ப்பத்தை கீழே போட்டுவிடவும்)
காமோகார்ஷீந் மன்யுர கார்ஷீத் நமோ நம:
என்று 108 அல்லது 1008 முறை ஜபம் செய்த பின், பவித்ரத்தைக் கழற்றி ஆசமனம் செய்யவும்.

2. யக்ஞோபவீத தாரணம் (பூணூல் அணிதல்)

ஆசமனம் செய்யவும். பவித்ரம், இடுக்குப் புல்லுடன் பிராணாயாமம் செய்யவும்.

[ஸங்கல்பம்]:
அத்யபூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம், சுபதிதௌ
ஸ்ரீ பகவதாக்ஞா பகவத் கைங்கர்யரூபம்
ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோபாகர்ம கரிஷ்யே.
ததங்கம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
ததங்கம் நவகாண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே.

மமச்ரௌத்த ஸ்மார்த்த விஹித நித்யகர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரஹ்ம தேஜோ அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
யக்ஞோபவீத தாரண மந்த்ரஸ்ய ப்ரஹ்மா ரிஷி: (தலையைத் தொட்டுக் கொள்ளவும்)
அனுஷ்டுப்: சந்த: (மூக்கைத் தொட்டுக் கொள்ளவும்)
த்ரைவித்யா தேவதா (மார்பைத் தொட்டுக் கொள்ளவும்)
யக்ஞோபவீத தாரணே விநியோக:

பூணூலை எடுத்துக்கொண்டு, ப்ரஹ்ம முடிச்சானது மேல்நோக்கி இருக்கும்படி வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லிப் பூணூலை அணிந்து கொள்ளவும்:

யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:

(க்ருஹஸ்தர்களுக்கு மட்டும் - 2வது பூணூல்)

ஸ்ரீ பகவதாக்ஞா பகவத் கைங்கர்யரூபம்
க்ருஹஸ்தார்த்தம் ஸித்யர்த்தம் த்விதீய யக்ஞோபவீதம் தாரணம் கரிஷ்யே

(முன்பு போலவே ரிஷி, சந்தஸ், தேவதா தியானம் செய்து மந்திரம் சொல்லி இரண்டாவது பூணூலையும் போட்டுக் கொள்ளவும்).

யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ:

3. நவகாண்டரிஷி தர்ப்பணம்

யக்ஞோபவீதத்தை (பழைய பூணூல், புதிதாகத் தரித்துக் கொண்ட பூணூல் இரண்டையும் மாலையாகப் போட்டுக் கொண்டு - உபவீதம்). ப்ரம்ம முடிச்சானது இரண்டு கைகளுக்கும் நடுவில் வரும்படியாக வைத்துக் கொண்டு, எள்ளும் அக்ஷதையும் சேர்த்துக் கொண்டு தீர்த்தத்துடன் கீழ்வரும் மந்திரங்களைச் சொல்லி இரண்டு கைகளின் நடுவில் (விரல் நுனி வழியாக) விட வேண்டும்.

1. ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3 தரம்)
2. ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3 தரம்)
3. அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3 தரம்)
4. விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி (3 தரம்)
5. ஸாங்குஹீதிர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி (3 தரம்)
6. யாக்ஞிகீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி (3 தரம்)
7. வாருணீர் தேவதா உபநிஷதஸ் தர்ப்பயாமி (3 தரம்)
📌 உள்ளங்கை பின்புறம் வழியே தீர்த்தம் சேர்க்கவும்:
• ப்ரஹ்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி
📌 கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தீர்த்தத்தை நேராக விடவும்:
• ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி
• ரிக் வேதம் தர்ப்பயாமி
• யஜுர் வேதம் தர்ப்பயாமி
• ஸாம வேதம் தர்ப்பயாமி
• அதர்வண வேதம் தர்ப்பயாமி
• இதிஹாஸம் தர்ப்பயாமி
• புராணம் தர்ப்பயாமி
• கல்பம் தர்ப்பயாமி

✅ தகப்பனார் இருப்பவர்கள் பூர்த்தி செய்யும் முறை:

பூணூலை உபவீதமாகப் (வழக்கம்போல இடது தோளில்) போட்டுக் கொள்ளவும். கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லிப் பழைய பூணூலைக் கழற்றிவிடவும் (கால் படாத இடத்தில் சேர்க்கவும்):

உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கச்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஹரே ப்ரஹ்மமன் வர்சோ தீர்காயுரஸ்துமே

ஆசமனம் செய்யவும். பிறகு சாத்வீக தியாகம் சமர்ப்பிக்கவும்:

காயேன வாசா மனஸேந்த்ரியைர் வா புbackgroundத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

(தகப்பனார் இருப்பவர்களுக்கு இத்துடன் உபாகர்மானுஷ்டானம் நிறைவு பெறுகிறது).

⚠️ இது "தகப்பனார் இல்லாதவர்கள்" மட்டும் செய்யவேண்டியது (பித்ரு தர்ப்பணம்)

பூணூலை "ப்ராசீனாவீதமாக" (வலது தோளில்) போட்டுக் கொள்ளவும்.
(ஒவ்வொரு மந்திரத்திற்கும் 3 தரம் கட்டைவிரல் வழியாக, அமாவாசையில் செய்வதுபோல் அர்க்கியம் சேர்க்க வேண்டும்).

1. தான் பித்ரூன் தர்ப்பயாமி (3 தரம்)
2. ஸர்வான் பித்ரூன் தர்ப்பயாமி (3 தரம்)
3. ஸர்வபித்ருகணான் தர்ப்பயாமி (3 தரம்)
4. ஸர்வபித்ருபத்னீஸ் தர்ப்பயாமி (3 தரம்)
5. ஸர்வபித்ருகணபத்னீஸ் தர்ப்பயாமி (3 தரம்)

பிறகு பூணூலை உபவீதமாகப் (இடது தோளில்) போட்டுக் கொண்டு, பழைய பூணூலைக் கழற்றவும்:

உபவீதம் பின்னதந்தும் ஜீர்ணம் கச்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஹரே ப்ரஹ்மமன் வர்சோ தீர்காயுரஸ்துமே

ஆசமனம் செய்து பின் சமர்ப்பணம் கூறவும்:

காயேன வாசா மனஸேந்த்ரியைர் வா புbackgroundத்யாத்மனா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||
SREYAS ASTRO

SREYAS ASTRO

சாஸ்திரபூர்வமான வைதீக சங்கல்பங்கள் & ஜோதிட வழிகாட்டுதல்

📍 Tirupati

4 thoughts on "ஆவணி அவிட்டம் (யஜுர் உபாகர்மம்) வைஷ்ணவ பூர்ண சங்கல்பம் & தர்ப்பண வழிகாட்டி (2026)"

  1. Rajaram says:

    Very nice 👍

    1. மிக்க நன்றி திரு. ராஜாராம் ஐயா! 🙏 உங்கள் ஆதரவிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். ஸ்ரீமந் நாராயணனின் திருவருளால் இந்த ஆவணி அவிட்டம் மற்றும் காயத்ரி ஜபம் இனிதே நிறைவேற நல்வாழ்த்துகள்! சாய்ராம்! 🪔✨

  2. Rajaram says:

    Very nice 👍 details sairam

    1. மிக்க நன்றி திரு. ராஜாராம் ஐயா! 🙏 உங்கள் ஆதரவிற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். ஸ்ரீமந் நாராயணனின் திருவருளால் இந்த ஆவணி அவிட்டம் மற்றும் காயத்ரி ஜபம் இனிதே நிறைவேற நல்வாழ்த்துகள்! சாய்ராம்! 🪔✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *