காலசர்ப்ப தோஷமா? அல்லது யோகமா? 28-32 வயதுக்குள் நடக்கும் விசித்திரங்கள் மற்றும் மதங்களை கடந்த எளிய பரிகாரங்கள்.
By sreyasastro / June 28, 2026 / 1 Comment / Blog, Spiritual Articles, Spiritual-Articles
[responsivevoice_button voice=”Tamil Male” buttontext=”▶️ கட்டுரையை ஒலியாகக் கேளுங்கள்”]
முன்னுரை
வேத ஜோதிடத்திலும் பிரபஞ்ச விதிகளிலும் “காலசர்ப்பம்” என்ற வார்த்தையைக் கேட்ட உடனே பலரும் கடுமையான பயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
ராகு மற்றும் கேது என்ற இரு நிழல் கிரகங்களின் பிடிக்குள் மற்ற ஏழு கிரகங்களும் அடைப்படுவதை ஜோதிட ரீதியாக இந்த காலசர்ப்ப அமைப்பாகும்.
ஆனால், SREYAS ASTRO-வின் ஆழமான ஜோதிட ஆராய்ச்சியின்படி, இது வெறும் தோஷமல்ல;
ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றி அசுர வளர்ச்சியைக் கொடுக்கும் உன்னதமான “காலசர்ப்ப யோகம்” ஆகும்!
28 அல்லது 32 வயதில் நடக்கும் காலசர்ப்ப விசித்திரங்கள் ஜோதிட சாஸ்திர விதிகளின்படி,
ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் முதிர்ச்சி வயது என்பது 28 முதல் 32 வயது ஆகும்.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் காலசர்ப்ப அமைப்பின் உண்மையான வீரியமும் தாக்கமும் ஜாதகரின் வாழ்வில் வெளிப்படத் தொடங்கும்.
இந்த யோகத்தின் செயல்பாடுகள் இரண்டு விசித்திரமான வழிகளில் நடக்கும்:* முற்காலக் கஷ்டம் – பிற்கால யோகம்:
சில ஜாதகர்களுக்கு ஆரம்பக் காலத்தில் கடுமையான போராட்டங்கள் இருக்கும். “காலில் செருப்பு கூட தங்காமல், நடையாய் நடந்து செருப்பு தேய்ந்து போனதுதான் மிச்சம்” என்கிற அளவிற்குப் பலவித சோதனைகளைச் சந்திப்பார்கள். ஜாதகத்தில் சுப கிரகங்கள் பார்வை இருந்தால், சொற்ப பலன்களை தரும்.
ஆனால், சரியாக 28 அல்லது 32 வயதைக் கடந்த பின்பு, அவர்களின் வாழ்க்கை முறை படிப்படியாக அசுர வேகத்தில் மேல்நோக்கிச் சென்று மாபெரும் செல்வந்தராக மாற்றுவார்.
முற்கால யோகம்.பிற்காலக் கஷ்டம்: ஒருசிலருக்கு ஜாதகர் பிறந்ததிலிருந்து குடும்பத்தாருக்கு அத்தனை நற்பலன்களையும், யோகங்களையும் வாரி வழங்கும்.
ஆனால், 28 அல்லது 32 வயதுக்கு பின் படிப்படியாக வாழ்க்கை கீழ்நோக்கிச் செல்லக்கூடும்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த காலசர்ப்ப யோகம் என்பது முற்காலத்திலோ அல்லது பிற்காலத்திலோ கஷ்டத்தைக் கொடுத்து, அதன் பின் கர்ம வினைகளைச் சுத்தப்படுத்தி ஆன்மீக ரீதியாகவும் உலக ரீதியாகவும் மனிதனைப் பக்குவப்படுத்தும் ஒரு உன்னதப் பிரபஞ்ச விதியாகும்.
–ஆணித்தரமான உண்மைச் சான்றுகள் (Case Studies) இது ஏட்டுக் கல்வி அல்ல;
SREYAS ASTRO-விடம் ஜாதக ஆலோசனை பெற்று,
நாம் காட்டிய எளிய நல்வழியைப் பின்பற்றி 50 முதல் 60 ஜாதகர்களில் 90% க்கும் அதிகமானோர் தங்களின் வாழ்வில் நிம்மதியுடனும் பலருக்கு மிக உன்னதமான நற்பலன்களை அடைந்துள்ளனர்.
காசுக்காகப் பல்லாயிரக்கணக்கில் செலவு செய்யச் சொல்லும் உலகிற்கு மத்தியில், ஒற்றை பைசா கட்டணமின்றி, எளிய மக்களின் துயர் துடைக்கும் நோக்கில் தகுந்த பரிகாரங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரம் இன்று உயர்ந்துள்ளது. அதற்கு உலகெங்கிலும் உள்ள நமது வாசகர்களின் நெகிழ்ச்சியான நன்றியுரைகளே சான்றாகும். குண்டூரில் பலன் அடைந்தவரின் கருத்து.

காலசர்ப்ப யோகத்திற்கான சூட்சும பரிகார முறைகள்
பொதுவாகக் காலசர்ப்ப தோஷம் என்றாலே காளஹஸ்தி அல்லது கும்பகோணம் அருகே உள்ள ராகு ஸ்தலங்களுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்யச் சொல்வதுண்டு.
ஆனால், பலருக்கு தெரியாத உண்மைகள் நமது ஆராய்ச்சியில் கர்ம வினையின் பிடியைக் குறைக்க மிக உன்னதமான சூட்சும பரிகாரம் கண்டறியப்பட்டுள்ளது: பலருக்கு கை மேல் பலன் அடைந்தனர்.
எமதர்ம ராஜன் – சித்திரகுப்தன் ஆலய வழிபாடு முறை மிக மிக முக்கியமானது
(ஆயில்ய நட்சத்திர ரகசியம்)
காலசர்ப்ப தோஷத்தின் தீவிரத்தைக் குறைக்க, ஜாதகர்கள் தங்களின் பரிகாரத்திற்குரிய விசேஷ நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தன்று எமதர்ம ராஜன் மற்றும் சித்திரகுப்தன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.
**மிக முக்கியமான நேர விதி:**
இந்த வழிபாட்டிற்குரிய பால் அபிஷேகம் கண்டிப்பாக காலை வேளையிலேயே செய்யப்பட வேண்டும்.
ஒருவேளை காலை வேளையைத் தவிர்த்துவிட்டு மாலை நேரத்தில் கோவிலுக்குச் சென்றால், அதன் மூலம் கிடைக்கப் பெறும் பலன்கள் மிகச் சொற்பமாகவே இருக்கும்! இது என் அனுபவத்தின் வரலாறு.
எனவே, ஆயில்ய நட்சத்திரத்தன்று காலையிலேயே பால் அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் மட்டுமே கிரக தோஷங்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.
உங்களுக்கு கோவிலின் விவரங்கள் ஏதேனும் நடை திறப்பு பால் அபிஷேகம் நேரங்கள் ஏதேனும் விவரங்கள் தேவைப்படுமாயின் எனது வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்.
| ஆலயத்தின் பெயர் / சன்னதி | அமைந்துள்ள இடம் / ஊர் |
|---|---|
| ஶ்ரீ எமதர்ம ராஜன் சன்னதி | வெள்ளலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு (500 வருட பழமையான தலம்) |
| … ஶ்ரீ சித்திரகுப்தன் ஆலயம் | காஞ்சிபுரம், தமிழ்நாடு (தென்னிந்தியாவின் புகழ்பெற்ற தனித்தலம்) |
| ஶ்ரீ எமதர்ம ராஜன் சன்னதி | திருவாஞ்சியம், திருவாரூர், தமிழ்நாடு (எமனுக்கு முதல் பூஜை) |
| கோட்டையூர் எமதர்மன் ஆலயம் | கும்பகோணம் அருகே, தமிழ்நாடு |
| … ஶ்ரீ சித்திரகுப்த மந்திர் | சவாரி பஜார், ஹைதராபாத், தெலுங்கானா |
| … ஶ்ரீ சித்திரகுப்த சுவாமி ஆலயம் | புது தில்லி |
2. மதங்களைக் கடந்த மாபெரும் ஆன்மீக யுக்தி (மாற்று மதத்தினருக்கு)
SREYAS ASTRO-விற்கு இந்துக்கள் மட்டுமன்றி மாற்று மதத்தைச் சேர்ந்த வாசகர்களும் ஜாதக ஆலோசனைக்கு வருவதுண்டு. மாற்று மதத்தினர் இந்து ஆலயங்களுக்குள் செல்ல இயலாத போது, அவர்களுக்கு ஒரு உன்னதமான ஆன்மீக யுக்தி வழிகாட்டப்படுகிறது:
ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் மாற்று மத அமைப்புகளையும், சூஃபி ஞானிகளின் அடக்கஸ்தலங்களையும் (தர்காக்கள்) குறிக்கும் காரகத்துவம் பெற்றவர்கள்.
எனவே, காலசர்ப்ப பாதிப்பு உள்ள மாற்று மதத்தினர், அந்தந்த பரிகார ஸ்தலங்கள் அமைந்துள்ள ஊர்களில் உள்ள புனித தர்காக்களுக்குச் சென்று, அங்குள்ள தியான நடைமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்து வரும்போது, பூமியின் காந்த அதிர்வுகளாலும் கிரக சுபத்துவத்தாலும் 100% மிகச் சிறந்த நற்பலன்களை அடைந்து விடுகிறார்கள்!
முடிவுரை
மதங்களைக் கடந்து மனிதர்களின் கர்ம வினைகளைத் தீர்ப்பதே உண்மையான ஜோதிட அறம். காலசர்ப்பம் கண்டு யாரும் அஞ்சத் தேவையில்லை. முறையான வழிகாட்டுதலும் எளிய பிரார்த்தனைகளும் உங்கள் விதியை மாற்றி வாழ்வை உன்னத நிலைக்கு உயர்த்தும்!
- அன்புடன் உங்களின் ஒருவன். – SREYAS ASTRO
தொடர்பு விபரங்கள்:
- இணையதளம்: SreyasAstro.com
- வாட்ஸ்அப் / மொபைல்: +91 9003100983
- மின்னஞ்சல்: sreyasastro@gmail.com
(அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை)
சுபம்

விரிவான பயனுள்ள வாழ்கை வழிகாட்டி தகவல்கள் ஐயா வாழ்த்துக்கள் 👍👍👍👍👍🙏🙏🙏