ஸாமவேதீய உபாகர்மா பூர்ண பிரயோகம் 2026 | Sreyas Astro
By sreyasastro / September 3, 2026 / 1 Comment / Blog, Spiritual Articles, Spiritual-Articles
ஸ்ரீவைஷ்ணவ ஸாமவேதீய உபாகர்மா ப்ரயோகம்
13.09.2026 — ஆவணி 27 (ஞாயிற்றுக்கிழமை)ஸாம உபாகர்மாவில் ப்ரயோகம் குடும்ப வழக்கப்படியும், ப்ருஹஸ்பதிகள் வழிநடத்துதலிலும் வேறுபடுகின்றது. அவரவர் குலாசாரப்படி நிச்சயித்துச் செய்யவும்.
பூணூல் மாற்றும் விதம்: தர்ப்பணத்திற்கு முன்னதாகவே மாற்றிக்கொள்வது சிலர் வழக்கம்; தர்ப்பித்தபின் மாற்றிக்கொள்வது சிலர் வழக்கம். உபாகர்ம ஹோமம் செய்பவர்கள் ஹோமத்தின் இடையில் மாற்றுவர்; ஹோமம் செய்யாமல் தர்ப்பணம் மட்டும் செய்பவர்கள் முன்னதாகவே மாற்றிக்கொள்ளலாம்.
★ முக்கிய சாஸ்திர நியதி: ஸாமவேதிகளுக்கு "காமோகார்ஷீத்" ஜபம் கிடையாது. உத்ஸர்ஜந கர்மாங்க தேவ-ருஷி-பித்ரு தர்ப்பணம் மட்டும் சிரத்தையுடன் செய்தால் போதுமானது.
தேவ தர்ப்பணம்
உபவீதம்: வலது கையில் 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) வைத்து அக்ஷதையுடன் கிழக்கு முகமாக நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.
ருஷி தர்ப்பணம்
நிவீதம் (மாலை): வலது கையில் 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) வைத்து அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி நடுரேகை வழியே வடக்கு முகமாகத் தர்ப்பிக்கவும்.
பித்ரு தர்ப்பணம்
ப்ராசீநாவீதம்: வலது கையில் 3 எருக்கு இலை, 3 நுனி தர்ப்பம் (தெற்கு நுனி) வைத்து எள்ளுடன் கட்டை-ஆள்காட்டி விரல் இடை வழியே தெற்கு முகமாகத் தர்ப்பிக்கவும்.
1. ஆசமனம் (2 முறை)
2. பவித்ரம் தரிக்கவும் (2 புல் பவித்ரம்)
3. ஆஸனம் (2 புல்), இடுக்குப் புல் (2 புல் விரலில் இடுக்கிக்கொள்ளவும்)
4. ப்ராணாயாமம் (3 முறை)
யஸ்ய த்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஸ்ஸதம் ! விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே !!
மஹா சங்கல்பம் (வலது தொடையில் கை வைத்தபடி)
ஹரிரோம் தத் - ஸ்ரீகோ’விந்த' கோ’விந்த' கோவிந்த' - அஸ்ய ஸ்ரீ ப'க'வத: மஹாபுருஷஸ்ய - விஷ்ணோ: ஆஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய - அத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்தே - ஸ்ரீஸ்வேத வராக கல்பே - வைவஸ்வத மந்வந்தரே - கலியுகே' - ப்ரதமே பாதே - ஜம்பூத்வீபே - பாரதவர்ஷே - பரதகண்டே - சகாப்தே - மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே - அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே —
பராபவ நாம ஸம்வத்ஸரே - தக்ஷிணாயனே - வர்ஷ ருதௌ - ஸிம்ம மாஸே சுக்லபக்ஷே - த்ருதீயாயாம் ஸுபதிதௌ - பாநு வாஸர யுக்தாயாம் - ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் - ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண ஸுபயோக ஸுபகரண ஏவங்குண விஸேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம் த்ருதீயாயாம் ஸுபதிதௌ —
ஸ்ரீப'க'வதாஜ்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் (பகவத் ப்ரீத்யர்த்தம்) பகவத் கைங்கர்ய ரூபம் - ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அத்யாயோத்ஸர்ஜந கர்மணி தே’வர்ஷி பித்ரு ப்ரீத்யர்த'ம் தே'வர்ஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே !
பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்தி'தி ப்ரவ்ருத்தி ஸ்வஸேஷதைகரஸேந அநேந ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயைஸ்ச உபகரணை: ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வஸேஷீ ஸ்ரிய:பதி: ஸ்வஸேஷபூதமித'ம் தே'வருஷி பித்ரு தர்ப்பணாக்²யம் கர்ம (பகவான்) ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி !!
அபிமான திவ்யதேச சங்கல்பங்கள் (அவரவர் வழக்கப்படி சேர்க்கவும்)
- ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்க க்ஷேத்ரே ப்ரணவாகார விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீரங்கநாயிகா ஸமேத ஸ்ரீரங்கநாதஸ்வாமி ஸந்நிதௌ
- திருமலை திருப்பதி: ஸ்ரீஆதிவராஹ க்ஷேத்ரே ஆநந்த விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீஅலர்மேல்மங்கா நாயிகா ஸமேத ஸ்ரீஸ்ரீநிவாஸ ஸ்வாமி ஸந்நிதௌ
- காஞ்சீபுரம்: ஸ்ரீஸத்யவ்ரத க்ஷேத்ரே புண்யகோடி விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீபெருந்தேவீ நாயிகா ஸமேத ஸ்ரீதேவாதிராஜ ஸ்வாமி ஸந்நிதௌ
- ஒப்பிலியப்பன்: ஸ்ரீமார்க்கண்டேய க்ஷேத்ரே ஸுத்தாநந்த விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீபூமிதேவீ நாயிகா ஸமேத ஸ்ரீலவணவர்ஜித ஸ்ரீவேங்கடேச ஸ்வாமி ஸந்நிதௌ
- திருவல்லிக்கேணி: ஸ்ரீப்ருந்தாரண்ய க்ஷேத்ரே ஸேஷகிரி விமாநச்சாயாயாம் ஸ்ரீருக்மிணீ ஸமேத ஸ்ரீவேங்கடக்ருஷ்ண ஸ்வாமி ஸந்நிதௌ
- திருக்கடல்மல்லை: ஸ்ரீஅர்த்தஸேது க்ஷேத்ரே ஆநந்தகோடி விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீநிலமங்கை நாயிகா ஸமேத ஸ்ரீஸ்தலஸயந ஸ்வாமி ஸந்நிதௌ
- திருவள்ளூர்: ஸ்ரீவீக்ஷாரண்ய க்ஷேத்ரே விஜயகோடி விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீகநகவல்லீ நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவ ஸ்வாமி ஸந்நிதௌ
- திருக்குடந்தை: ஸ்ரீபாஸ்கர க்ஷேத்ரே வைதீக விமாந நிலயச்சாயாயாம் ஸ்ரீகோமளவல்லீ நாயிகா ஸமேத ஸ்ரீஆராவமுத ஸ்வாமி ஸந்நிதௌ
1. தேவ தர்ப்பணம் (001 - 081)
முறை: உபவீதம் | வலது கையில் 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) + அக்ஷதை சேர்த்து கிழக்கு நோக்கி நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.
2. ருஷி தர்ப்பணம் (082 - 120)
முறை: நிவீதம் (மாலை) | 2 எருக்கு இலை, 2 நுனி தர்ப்பம் (வடக்கு நுனி) + அக்ஷதை சேர்த்து வடக்கு நோக்கி சுண்டு விரல் அடி நடுரேகை வழியே தர்ப்பிக்கவும்.
3. தேவ தர்ப்பணம் (121 - 137)
முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.
4. ருஷி தர்ப்பணம் (138 - 150)
முறை: நிவீதம் (மாலை) | வடக்கு நோக்கி அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி ரேகை வழியே தர்ப்பிக்கவும்.
5. தேவ தர்ப்பணம் (151 - 160)
முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.
6. ருஷி வம்ச பரம்பரை தர்ப்பணம் (161 - 214)
முறை: நிவீதம் (மாலை) | வடக்கு நோக்கி அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி ரேகை வழியே தர்ப்பிக்கவும்.
7. தேவ தர்ப்பணம் (215 - 219)
முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.
ப்ரஹ்மா ஸ்வயம்பு: தஸ்மை நம: தேப்யோ நம: ஆசார்யேப்யோ நமஸ்க்ருத்வா அதவம்ஸ்ய கீர்தயேத்! ஸ்வதா பூர்வேஷாம் பவதி நேதா பூர்தீக மஸ்நுதே !!
8. ருஷி தர்ப்பணம் (220 - 259)
முறை: நிவீதம் (மாலை) | வடக்கு நோக்கி அக்ஷதையுடன் சுண்டு விரல் அடி ரேகை வழியே தர்ப்பிக்கவும்.
9. தேவ தர்ப்பணம் (260 - 264)
முறை: உபவீதம் | கிழக்கு நோக்கி அக்ஷதையுடன் நுனி விரல்கள் வழியே தர்ப்பிக்கவும்.
ப்ரஹ்மா ஸ்வயம்பு: தஸ்மை நம: தேப்யோ நம: !!
பித்ரு தர்ப்பணம் (ப்ராசீநாவீதம்)
முறை: 3 புல் பவித்ரம் தரிக்கவும். பூணூலை வலது தோளிலிருந்து தொங்கும்படி மாற்றிக்கொள்ளவும் (ப்ராசீநாவீதம்). வலது கையில் 3 எருக்கம் இலை, 3 நுனி தர்ப்பங்கள் (தெற்கு நுனி) வைத்து எள் சேர்த்துக்கொள்ளவும். வலது கை கட்டைவிரல் - ஆள்காட்டி விரல் நடுவில் மறித்தாற்போல் தெற்கு திசையில் தீர்த்தம் விடவும்.
(ஒவ்வொரு மந்திரத்துக்கும் மூன்று தடவை தர்ப்பணம் செய்ய வேண்டும்)
- பித்ரூணாம் த்ருப்திரஸ்து
- பிதாமஹாநாம் த்ருப்திரஸ்து
- ப்ரபிதாமஹாநாம் த்ருப்திரஸ்து
- மாத்ரூணாம் த்ருப்திரஸ்து
- மாதாமஹாநாம் த்ருப்திரஸ்து
- ப்ரமாதாமஹாநாம் த்ருப்திரஸ்து
- ஆசார்யாணாம் த்ருப்திரஸ்து
- ப்ராசார்யாணாம் த்ருப்திரஸ்து
- ஸம்ஹிதாகார, பதகார, ஸூத்ரகார, ப்ராஹ்மணகாராணாம் த்ருப்திரஸ்து
- ப்ராஹ்மணாநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து
- ப்ராஹ்மணீநாம் ஏகபத்நீநாம் அநபத்யாநாம் த்ருப்திரஸ்து
- ஸர்வேஷாம் ச ப்ரஹ்மசாரிணாம் த்ருப்திரஸ்து
(பூணூலை உபவீதமாக்கி, பவித்ரத்தைக் காதில் வைத்துக்கொண்டு ஆசமனம் 2 முறை செய்யவும்)
ஸாத்விக த்யாகம் (வடகலையார் மட்டும்):பகவாநேவ ஸ்வநியாம்ய ஸ்வரூபஸ்தி'தி ப்ரவ்ருத்தி ஸ்வஸேஷதைகரஸேந அநேந ஆத்மநா கர்த்ரா ஸ்வகீயைஸ்ச உபகரணை: ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸர்வஸேஷீ ஸ்ரிய:பதி: ஸ்வஸேஷபூதமித'ம் தே'வருஷி பித்ரு தர்ப்பணாக்²யம் கர்ம (பகவான்) ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவாந் !
(பவித்ரம் கழற்றிவிட்டு ஆசமனம் 2 முறை பண்ண வேண்டியது)
யஜ்ஞோபவீத தாரணம்
வழக்கம்போல் சங்கல்பித்து யஜ்ஞோபவீதத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது.
!! சுபம் !!

God bless you 🙏🙏