காயத்ரி ஜபம் வைஷ்ணவ சங்கல்பம் 2026 | பூர்ண மந்திரம் & உபஸ்தானம் – SREYAS ASTRO
By sreyasastro / August 25, 2026 / No Comments / Blog, Spiritual Articles, Spiritual-Articles

காயத்ரி ஜபம் வைஷ்ணவ சங்கல்பம் & பூர்ண மந்திரம் 2026
ஆவணி காயத்ரி மகா ஜப சங்கல்பம், பிராணாயாமம், ஆவாஹனம், ஜப முறை, உபஸ்தானம் & திசா வந்தன முழு சாஸ்திர விபரம்
📅 28.08.2026 — வெள்ளிக்கிழமை (Friday)
ஆவணி 11 (பராபவ நாம ஸம்வத்ஸரம்)
📌 திதி விபரம்: பௌர்ணமாஸ்யாம் (Upto 10:30 AM) // ப்ரதமயாம் (From 10:31 AM)
🌟 காயத்ரி மகா ஜபத்தின் பெருமை:
ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் (ஆவணி 11) அதிகாலையில் நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துவிட்டு 1008 முறை காயத்ரி மகா மந்திரத்தை ஜபிப்பது மகா பாக்கியமாகும். காயத்ரி ஜபம் வைஷ்ணவ சங்கல்பம் செய்து ஸ்ரீமந் நாராயணனின் பிரீதிக்காக பகவத் கைங்கர்ய ரூபமாக காயத்ரி ஜபம் செய்வதால் பிரம்மதேஜஸ் ஓங்கி சகல பாபங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
1. காயத்ரி மகா ஜப ஆரம்ப சங்கல்பம்
தீர்த்தமாடி கால்கள், கைகளை அலம்பி ஆசமனம் (அச்யுதாய நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம:) செய்யவும். தர்ப்பத்தைப் பவித்ர விரலில் போட்டுக் கொண்டு, 2 தர்ப்பங்களை ஆசனமாகப் போடவும். 2 தர்ப்பங்களைப் பவித்ரத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
(கைகளை வலது தொடை மேல் வைத்துக் கொண்டு) ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த... அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே ஸ்ரீ ச்வேத வரஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி: ஸம்வத்ஸராணாம் மத்யே...
பராபவ நாம ஸம்வத்ஸரே - தக்ஷிணாயனே - வர்ஷ ருதௌ - ஸிம்ம மாஸே - க்ருஷ்ண பக்ஷே - ப்ரதமாயாம் சுபதிதௌ - வாஸர: ப்ருகு வாஸர யுக்தாயாம் - சதபிஷக் நக்ஷத்ரயுக்தாயாம்
ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் சுபதிதௌ
ஸ்ரீபகவதாக்ஞா பகவத்கைங்கர்யரூபம் மித்யாப்ராஹ்மண ப்ரதிக்ரஹ ப்ரயுக்தாநாம் தைத்யதான ப்ரயுக்தாநாம் ஏவமாதி நாம் உபாதாக ஸமஸ்த பாபக்ஷயார்த்தம், ஸம்வத்ஸர ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்தர சத ஸங்க்யா (108 முறை) / அஷ்டோத்தர ஸஹஸ்ரஸங்க்யா (1008 முறை) காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே.
2. பிராணாயாமம், நியாஸம் & தியானம்
பூராதி ஸப்தவ்யாஹ்ருதீநாம் — அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம காச்யப ஆங்கீரஸ ரிஷய: — காயத்ரீ உஷ்ணிக் அனுஷ்டுப் ப்ருஹதீ பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய: சந்தாம்ஸி — அக்னி வாயு அர்க்க வாகீச வருண இந்த்ர விச்வே தேவா: தேவதா: |
ஸாவித்ர்யா ரிஷி: விச்வாமித்ர: — தேவீகாயத்ரீ சந்த: — ஸவிதா தேவதா |
காயத்ரீசிரஸோ ப்ரஹ்மரிஷி: — அனுஷ்டுப் சந்த: — பரமாத்மா தேவதா |
என்று நியாஸம் செய்து, ஸர்வேஷாம் ப்ராணாயாமே விநியோக: என்று சொல்லி 10 முறை பிராணாயாமம் செய்யவும்.
முக்தாவித்ரும ஹேமநீலதவளச் சாயைர் முகைத் த்ரீக்ஷணை: |
யுக்தா மிந்துகலாநிபத்த மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் |
காயத்ரீம் வரதாபயாங்குசகசா: சுப்ரம் கபாலம் குணம் |
சங்கம் சக்ரமதாரவிந்தயுகளம் ஹஸ்தைர்வஹந்தீம் பஜே ||
(என்று ஸாவித்ரீ தேவதையைத் தியானித்து, “ஓம் ஆபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ் ஸுவரோம்” என்று தலைமுதல் கால் வரை இரண்டு கைகளால் தொட்டுக் கொள்ளவும்).
ஆயாத்வித்யநுவாகஸ்ய வாமதேவரிஷி: — அனுஷ்டுப்சந்த: — காயத்ரீ தேவதா — காயத்ரீ ஆவாஹனே விநியோக:
ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மஸம்மிதம் |
காயத்ரீம் சந்தஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந: ||
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு: — அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி |
ஸாவித்ர்யா ரிஷி: விச்வாமித்ர: — தேவீகாயத்ரீ சந்த: — ஸவிதா தேவதா — ஜபே விநியோக: |
யோ தேவ: ஸவிதாஸ்மாகம் தியோ தர்மாதிகோசரா: |
ப்ரேரயேத் தஸ்ய யத்தேஜ: தத்வரேண்யமுபாஸ்மஹே ||
3. காயத்ரி மகா மந்திர ஜபம் (1008 / 108 முறை)
சூரிய மண்டலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந் நாராயணனைத் தியானம் செய்து, இரண்டு கைகளையும் உத்தரீயத்தினால் மூடிக் கொண்டு, வலது கை சுண்டுவிரல் அடிக்கோடு முதல் பிரதக்ஷிணமாக விரல் ரேகைகளில் எண்ணி 1008 அல்லது 108 முறை ஜபிக்கவும்:
ஓம் பூர்புவஸ்ஸுவ: | தத் ஸவிதுர் வரேண்யம் |
பர்கோ தேவஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் ||
4. காயத்ரி உபஸ்தானம் & உத்வாஸனம்
பிராணாயாமம் செய்து, எழுந்து நின்று ஸ்ரீமந் நாராயணனின் திருவுள்ளப் பாங்கிற்காக சங்கல்பம் செய்யவும்:
உத்தம இத்யநுவாகஸ்ய வாமதேவரிஷி: — அனுஷ்டுப் சந்த: — காயத்ரீ தேவதா — காயத்ரீ உத்வாஸநே விநியோக: |
உத்தமே சிகரே தேவீ பூம்யாம் பர்வதமூர்தநி |
ப்ராஹ்மணேப்யோ ஹ்யநுஜ்ஞாநம் கச்சதேவீ யதாஸுகம் ||
ஓம் மித்ரஸ்ய சர்ஷணீத் ருத: — ச்ரவோ தேவஸ்ய ஸாநஸிம் — ஸத்யம் சித்ரச்ரவஸ்தமம் — மித்ரோ ஜநாந் யாதயதி ப்ரஜாநந் — மித்ரோ தாதார ப்ருதிவீ முதத்யாம் மித்ர: க்ருஷ்டீர நிமிஷாபி சஷ்டே — ஸத்யாய ஹவ்யம் க்ருதவத்விதேம ப்ரஸமித்ர மர்தோ அஸ்து ப்ரயஸ்வாந் — யஸ்த ஆதித்ய சிக்ஷதி வ்ரதேந — ந ஹந்யதே ந ஜீயதே — த்வோதோ நைநமக்ஹோ அச்நோதி — அந்திதோ ந தூராத்.
5. ஸந்த்யாதி தேவதா வந்தனம் & திசா வந்தனம்
இரண்டு கைகளையும் கூப்பிக்கொண்டு அந்தந்தத் திசையை நோக்கி வணங்கவும்:
• ஓம் ஸாவித்ர்யை நம: (தெற்கு)
• ஓம் காயத்ர்யை நம: (மேற்கு)
• ஓம் ஸரஸ்வத்யை நம: (வடக்கு)
• ஓம் ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம:
• காமோகார்ஷீந் மன்யுராகார்ஷீத் நமோ நம:
அபிவாதயே... [ப்ரவரம்]... [கோத்ரம்]... [சூத்ரம்]... [வேதம்]... [பெயர்] சர்மா நாமாஹம் அஸ்மி போ: ||
• ஓம் ப்ராச்யை திசே நம: (கிழக்கு)
• ஓம் தக்ஷிணாயை திசே நம: (தெற்கு)
• ஓம் ப்ரதீச்யை திசே நம: (மேற்கு)
• ஓம் உதீச்யை திசே நம: (வடக்கு)
• ஓம் ஊர்த்வாய நம: (ஆகாயம் நோக்கி)
• ஓம் அதராய நம: (பூமி நோக்கி)
• ஓம் அந்தரிக்ஷாய நம: (மேலே நோக்கி)
• ஓம் பூமியை நம: (தரை நோக்கி)
• ஓம் விஷ்ணவே நம: (சூரிய மண்டலம் நோக்கி)
த்யேயஸ் ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண: ஸரஸிஜாஸந ஸந்நிவிஷ்ட: |
கேயூரவாந் மகரகுண்டலவாந் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபு: த்ருதசங்கசக்ர: ||
சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத | கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாகதம் ||
ஆசமனம் செய்து, பவித்ரத்தைக் கழற்றி சமர்ப்பணம் கூறவும்:
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

SREYAS ASTRO
சாஸ்திரபூர்வமான வைதீக சங்கல்பங்கள் & ஜோதிட வழிகாட்டுதல்
📍 Tirupati
