SREYAS ASTRO Logo
SREYAS ASTRO | பித்ரு மோக்ஷ புண்ணிய வழிகாட்டி

வருட பித்ரு தர்ப்பண காலண்டர் (96 ஷண்ணவதி தர்ப்பணங்கள்)

வருட பித்ரு தர்ப்பணம் அட்டவணை: அமாவாசை, மாதப் பிறப்பு (சங்கிரமணம்), மகாளய பட்சம் மற்றும் கிரகண புண்ணிய கால சங்கல்ப வழிகாட்டி

📢 ✨

வாசகர்கள் கவனத்திற்கு: சங்கல்ப மந்திர வெளியீடு அறிவிப்பு

ஒவ்வொரு புண்ணிய காலத்திற்கான துல்லியமான சங்கல்ப மந்திரங்கள், வாக்கிய/திருக்கணித பஞ்சாங்க நேரங்கள் மற்றும் சாஸ்திர விதிமுறைகள் அந்தந்த நிகழ்விற்கு 15 தினங்களுக்கு முன்னதாகவே நமது SREYAS ASTRO வலைத்தளத்தில் விரிவாக வெளியிடப்படும்!

“பித்ருக்களுக்குச் செய்யப்படும் எள்ளும் தீர்த்தம் மட்டுமே தர்ப்பணம், இதனால் ஏற்படும் சாஸ்திரம் ரீதியான பலன்கள்- குடும்பத்தில் உள்ள சகல தோஷங்களையும் நீக்கி வம்ச விருத்தியையும், நீடித்த ஐஸ்வர்யத்தையும் அருளும் மகா புண்ணிய காரியமாகும்.”

| ஷண்ணவதி தர்ப்பணம் என்றால் என்ன? (96 தர்ப்பணங்கள்)

இந்து தர்ம சாஸ்திரங்களின்படி ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய உன்னதமான புண்ணிய தினங்கள் மொத்தம் 96 (ஷண்ணவதி) ஆகும்.

அதில் அனைவராலும் தவறாமல் செய்யப்பட வேண்டிய மிக முக்கியமானவை: 12 அமாவாசைகள், 12 மாதப் பிறப்பு (சங்கிரமண) தினங்கள், 16 மகாளய பட்ச நாட்கள் மற்றும் இந்தியாவில் தெரியக்கூடிய சூரிய / சந்திர கிரகண புண்ணிய காலங்கள் ஆகும்.

🔍 தர்ப்பண வழிகாட்டி & சங்கல்பப் பக்கத்திற்குச் செல்லவும்

கீழே உள்ள பட்டியலில் நீங்கள் பார்க்க விரும்பும் தர்ப்பணத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

| வருட 96 பித்ரு தர்ப்பணங்களின் சாஸ்திரக் கணக்கீடு

🌑 அமாவாசை தினங்கள் (12)

சித்திரை முதல் பங்குனி வரை வரும் 12 மாத அமாவாசை புண்ணிய தினங்கள்.

☀️ மாதப் பிறப்புகள் (12)

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் 12 மாத சங்கிரமண புண்ணிய காலங்கள்.

🪔 மகாளய பட்ச தினங்கள் (16)

புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் அமாவாசை வரையிலான 16 புண்ணிய நாட்கள்.

🔱 மன்வாதி தினங்கள் (14)

14 மனுக்கள் ஆட்சி தொடங்கிய மன்வாதி புண்ணிய தினங்கள்.

🕉️ யுகாதி தினங்கள் (4)

கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள் தொடங்கிய 4 யுகாதி புண்ணிய காலங்கள்.

⚡ வைதிருதி & வியதீபாதம் (24)

12 வைதிருதி யோகம் + 12 வியதீபாத யோகம் கூடிய மகா புண்ணிய தினங்கள்.

📜 அஷ்டகா & அன்வஷ்டகா (12)

ஹேமந்த, சிசிர ருதுக்களில் வரும் பூர்வேத்யுஹ், அஷ்டகா மற்றும் அன்வஷ்டகா நாட்கள்.

🌘 கிரகண புண்ணிய காலங்கள்

இந்தியாவில் தென்படும் சூரிய மற்றும் சந்திர கிரகண ஸ்பர்ச-மோக்ஷ காலங்கள்.

📌 தர்ப்பணம் செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள்:

    • வாசல் சுத்தி & கோலம்: தர்ப்பணம் செய்யும் நாளன்று காலையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்ய வேண்டும்; ஆனால் தர்ப்பணம் முடியும் வரை வாசலில் கோலம் போடக் கூடாது. தர்ப்பணம் பூர்த்தியான பிறகே வாசலில் கோலம் இட வேண்டும்.
    • நித்திய பூஜை நியமம்: கர்த்தாக்கள் தர்ப்பணம் செய்வதற்கு முன்னதாகவே காலையில் நித்திய பூஜையை முடித்துவிட்டுத் தர்ப்பணம் செய்யலாம். அல்லது தர்ப்பணம் செய்து முடித்த பிறகு மீண்டும் ஸ்நானம் (குளியல்) செய்துவிட்டு நித்திய பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது சாஸ்திர / ஆகம விதியாகும்.
    • உச்சிகால நேரம்: தர்ப்பணத்தை எப்போதும் உச்சி காலத்திற்குள் (மதியம் 11:30 முதல் 1:00 மணிக்குள்) செய்து முடிப்பது மிகவும் உத்தமமானது.
    • திசை & உபகரணங்கள்: கிழக்கு அல்லது தெற்கு திசை நோக்கி அமர்ந்து பவித்திரம், கூர்ச்சம் மற்றும் கறுப்பு எள் கொண்டு மனத்தூய்மையுடன் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    • 📌 தர்ப்பணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சாஸ்திர விதிகள்:

      • வாசல் சுத்தி & கோலம்: தர்ப்பணம் செய்யும் நாளன்று காலையில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்ய வேண்டும்; ஆனால் தர்ப்பணம் முடியும் வரை வாசலில் கோலம் போடக் கூடாது. தர்ப்பணம் பூர்த்தியான பிறகே வாசலில் கோலம் இட வேண்டும்.
      • நித்திய பூஜை நியமம்: கர்த்தாக்கள் தர்ப்பணம் செய்வதற்கு முன்னதாகவே காலையில் நித்திய பூஜையை முடித்துவிட்டுத் தர்ப்பணம் செய்யலாம். அல்லது தர்ப்பணம் செய்து முடித்த பிறகு மீண்டும் ஸ்நானம் (குளியல்) செய்துவிட்டு நித்திய பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்பது சாஸ்திர / ஆகம விதியாகும்.
      • உச்சிகால நேரம்: தர்ப்பணத்தை எப்போதும் உச்சி காலத்திற்குள் (மதியம் 11:30 முதல் 1:00 மணிக்குள்) செய்து முடிப்பது மிகவும் உத்தமமானது.
      • திசை & உபகரணங்கள்: கிழக்கு அல்லது தெற்கு திசை நோக்கி அமர்ந்து பவித்திரம், கூர்ச்சம் மற்றும் கறுப்பு எள் கொண்டு ஸ்ரீமந் நாராயண ஸ்மரணத்துடன் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
      SREYAS ASTRO

      SREYAS ASTRO

      சாஸ்திரபூர்வமான பித்ரு சங்கல்பங்கள் & ஜோதிட வழிகாட்டுதல்

      📍 Tirupati

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *